சாம்பியன்ஸ் லீக்: அத்லான்டாவை 6-1 என வென்ற பாயர்ன் முனிக்

top-news

பெர்காமோ, மார்ச் 11-

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் பாயர்ன் முனிக் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அத்லான்டாவை 6-1 என பெரும் கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஜெர்மனியின் இந்த சக்திவாய்ந்த அணி தொடக்கத்திலிருந்தே ஆட்டத்தை முழுமையாக கட்டுப்படுத்தி, முதல் 25 நிமிடங்களுக்குள் மூன்று கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.

12-ஆவது நிமிடத்தில் செர்ஜ் ஞாப்ரியின் துல்லியமான பாஸை பெற்ற யோசிப் ஸ்டானிசிச், காலியான கோல் வலையில் பந்தை தள்ளி பாயர்னுக்கு முதல் கோலை பெற்றுத் தந்தார்.

அதனைத் தொடர்ந்து 10 நிமிடங்களுக்குப் பிறகு மைக்கேல் ஒலிசே அழகான வளைந்த ஷாட்டை அடித்து பந்தை வலையில் அனுப்பி பாயர்னின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

முழுப் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்திய பாயர்ன் முனிக், இந்த வெற்றியுடன் அடுத்த கட்டத்திற்கான வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தியது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *