விஜய் சேதுபதி நடித்துள்ள ‘டிரெயின்’ படத்தின் பிடிஎஸ் வீடியோ வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 28-

 நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பின்னணி (பிடிஎஸ்) வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் சுருதிஹாசன், நாசர், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரயில் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், டார்க் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்கத்துடன் இசையமைப்புப் பணிகளையும் மிஷ்கின் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், படத்தின் உருவாக்கப் பணிகள், படப்பிடிப்பு காட்சிகள் மற்றும் நடிகர்களின் பங்களிப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய பிடிஎஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற முக்கிய தருணங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான பிடிஎஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *