குற்றச்சாட்டை எதிர்கொள்ள இருந்த தபோங் ஹாஜி முன்னாள் தலைமை செயல்பாட்டு அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலாம், செப். 3 –

தபோங் ஹாஜி வாரியத்தின் முன்னாள் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஒருவர் இன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொள்ள இருந்த நிலையில், இதயப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

டத்தோ பட்டம் கொண்ட அந்த நபரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வான் அஸ்வான் ஐமான் வான் பக்ருதீன், நீதிபதி அவாங் கெரிஸ்நாடா அவாங் மஹ்மூட் முன்னிலையில் நடைபெற்ற நீதிமன்ற நடவடிக்கையின் போது இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு வந்திருந்த அவரது மனைவி, கடந்த வார இறுதியில் தனது கணவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *