பெனால்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது மொராக்கோ; அடுத்த சுற்றுக்கு தகுதி

top-news
FREE WEBSITE AD

மொன்டெர்ரே, ஜூன் 30 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32 அணிகள் சுற்றில், மொராக்கோ அணி பெனால்டி ஷூட் அவுட்டில் நெதர்லாந்தை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி 16-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

மொன்டெர்ரே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 90 நிமிடங்களும் கூடுதல் நேரமான 120 நிமிடங்களும் முடிவடைந்தபோதும் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

72-ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் கோடி காக்போ கோல் அடித்து நெதர்லாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், ஆட்டம் முடிவடைய சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், 91-ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய இசா டியோப் தலையால் கோல் அடித்து மொராக்கோவை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார்.

கூடுதல் நேரத்திலும் வெற்றி கோல் எதுவும் வராததால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. அதில் மொராக்கோ 3-2 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான டிக்கெட்டை உறுதி செய்தது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *