செனகலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பெல்ஜியம்

top-news
FREE WEBSITE AD

சியாட்டில், ஜூலை 2 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32 அணிகள் சுற்றில், பெல்ஜியம் அணி செனகலை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

சியாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஆட்டம் முழுவதும் பரபரப்பாக நீடித்தது.

பெல்ஜியம் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகளைச் சிறப்பாக பயன்படுத்தி மூன்று கோல்களைப் பதிவு செய்தனர். மறுபுறம், செனகல் இரண்டு கோல்கள் அடித்து கடைசி வரை போராடினாலும், சமநிலை கோலை அடிக்க முடியவில்லை.

இந்த வெற்றியின் மூலம் பெல்ஜியம் 16-ஆவது சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது. அடுத்த சுற்றில் பெல்ஜியம், போஸ்னியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முன்னேறிய அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *