பாஸ் – அம்னோ ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு இல்லை: துவான் இப்ராஹிம்
- Surendran Sumdraraj
- 08 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 8 –
பாஸ் மற்றும் அம்னோ கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இதுவரை எந்தவித இறுதி முடிவையும் எட்டவில்லை என்று பாஸ் துணைத் தலைவர் Tuan Ibrahim Tuan Man தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளின் தலைவர்களும் இடம்பெற்றுள்ள உள்கட்சி குழுவொன்றின் மூலம் இந்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களை முன்னிட்டு பாஸுக்கு சில தொகுதிகள் மற்றும் பதவிகள் வழங்க அம்னோ முன்வந்துள்ளதாக வெளியான தகவல்களை அவர் மறுத்தார்.
“இதுவரை ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாஸுக்கு தொகுதிகள் அல்லது பதவிகள் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெறும் வதந்திகள் மட்டுமே,” என்று துவான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல் (PN) துணைத் தலைவருமான அவர், தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் சாதாரண கலந்துரையாடல் கட்டத்திலேயே உள்ளதாகவும் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

