அறிமுக போட்டியிலேயே ஹாட்ரிக் – பென்செமா அசத்தல்

top-news

சவூதி அரேபியா, பிப். 6-

சவூதி புரோ லீக் முன்னணி அணியான அல்ஹிலால், அல்அக்தூத் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்திய போட்டியில், கரீம் பென்செமா தனது அறிமுக ஆட்டத்திலேயே ஹாட்ரிக் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

38 வயதான முன்னணி ஸ்ட்ரைக்கர் பென்செமா, திங்கட்கிழமை அல்ஹிலால் அணியில் இணைந்தார். அவர் முன்பு விளையாடிய அல்இத்திஹாத் அணியுடன் ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததாகவும், அதன்பின் அல்ஹிலாலில் சேர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பென்செமா 2023ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணியில் 14 ஆண்டுகள் விளையாடிய பின்னர், இலவச மாற்றத்தில் அல்இத்திஹாத் அணிக்குச் சென்றிருந்தார்.

போட்டியில் பென்செமா உடனடி தாக்கத்தை ஏற்படுத்தினார். முதல் பாதியில் அரை மணி நேரம் கடந்த உடனே,  அவர் முதல் கோலை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து 60ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து அல்ஹிலாலின் முன்னிலையை அதிகரித்தார். மேலும், அதற்குப் பின் நான்கு நிமிடங்களில், மீண்டும் மூன்றாவது கோலை அடித்து ஹாட்ரிக்கை நிறைவு செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் அல்ஹிலால் தனது லீக் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *