வியட்நாமுக்கு எதிரான ஆட்டம்: ஹரிமாவ் மலாயாவுக்குப் பிரதமர் அன்வார் வாழ்த்து

top-news

கோலாலம்பூர், அக். 5 –

ஆசியான் பிபா கிண்ண கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் வியட்நாமை எதிர்கொள்ளவுள்ள மலேசியாவின் ஹரிமாவ் மலாயா அணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான ஆட்டத்தை முன்னிட்டு சமூக ஊடகத்தில் பதிவிட்ட அன்வார், மலேசிய வீரர்கள் முழு உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் களமிறங்கி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள கெலோரா புங்கர்னோ விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், மலேசிய அணி வியட்நாமை எதிர்கொள்கிறது. மூன்றாவது இடத்தை கைப்பற்றுவதற்காக இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“வியட்நாமுக்கு எதிரான மூன்றாவது இடத்திற்கான போட்டியில் களமிறங்கும் ஹரிமாவ் மலாயா அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். முழு உத்வேகத்துடன் போராடி, மார்பில் அணிந்திருக்கும் தேசிய சின்னத்திற்காக உங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். மலேசிய மக்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறார்கள்,” என்று அன்வார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *