பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டிக்கு ஆதரவு: இரு பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு கட்சி ஒப்புதல்
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
கோலாலம்பூர், ஆக. 26-
பகாங் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க முடிவு செய்துள்ள தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு பெர்சத்து கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக பெர்சத்து துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது பைசால் அசுமு கூறினார்.
கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகிதீன் யாசின் தலைமையில் நடைபெற்ற அரசியல் பணியகக் கூட்டத்தில் இந்த விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கோலா செந்தூல் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜஸ்ரி ஜமாலுடின் மற்றும் லெப்பார் சட்டமன்ற உறுப்பினர் முகமது யாசிட் முகமது யூனுஸ் ஆகியோர், வான் ரோஸ்டிக்கு தங்களின் ஆதரவைத் தொடர்ந்து வழங்க விரும்புவதாகக் கட்சித் தலைமையிடம் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவை கட்சியே எடுக்க வேண்டும் என இருவரும் தலைமையிடம் ஒப்படைத்ததாக அகமது பைசால் கூறினார்.
இரு சட்டமன்ற உறுப்பினர்களும் பகாங் மாநில அரசின் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு மந்திரி பெசாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகப் பெர்சத்து குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



