தபுங் ஹாஜி விவகாரங்களுடன் தம்மை தொடர்புபடுத்துவதைக் கண்டித்தார் அஸ்ராஃப் வஜ்தி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 14 —

லெம்பாகா தாபுங் ஹாஜி (TH) தொடர்பான பல்வேறு விவகாரங்களுடன் தம்மைத் தொடர்புபடுத்தும் முயற்சிகள், தமது நற்பெயரையும் அரசியல் பிம்பத்தையும் களங்கப்படுத்தும் நோக்கத்திலானவை என அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஸ்ராஃப் வஜ்தி துசுக்கி தெரிவித்துள்ளார்.

அச்சமயத்தில் பிரதமர் துறை (சமய விவகாரங்கள்) துணை அமைச்சராகப் பதவி வகித்த தமக்கு, தாபுங் ஹாஜியின் செயல்பாடுகள் அல்லது கொள்கை முடிவுகளில் நேரடியாக தலையிடும் அதிகாரம் இருக்கவில்லை என்றார்.

அத்துடன், அமைச்சருக்குப் பதிலாகச் செயல்படும் சூழ்நிலையிலும் கூட, தாபுங் ஹாஜியின் செயல்பாடுகள் அல்லது கொள்கை முடிவுகளில் தலையிட தமக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

அமைச்சர், துணை அமைச்சர், நாடாளுமன்றச் செயலாளர் மற்றும் அரசியல் செயலாளர் ஆகியோரின் அதிகாரங்கள் தொடர்பான விடயங்கள் அனைத்தும் கூட்டரசு அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அஸ்ராஃப் வஜ்தி தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *