தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

top-news
FREE WEBSITE AD

சென்னை: தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு தமிழக அரசுப் பணிகளில் 20 சதவீத முன்னுரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் காலியிடங்களில் 20 சதவீதத்தை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்காக 2010ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது.

எனினும், ஏற்கனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் இந்த முன்னுரிமையை பெற முடியாது என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது. இதனைத் தெளிவுபடுத்தவும், 2010 செப்டம்பர் 7ஆம் தேதிக்குப் பின்னர் தமிழ்வழிக் கல்வி முன்னுரிமையின் அடிப்படையில் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களின் நியமனம் செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்யவும் கடந்த ஜனவரி மாதம் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது கவர்னரின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த திருத்தச் சட்டம் இனி புதிதாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *