ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்; தொகுதிப் பங்கீடு அடுத்த வாரம் இறுதி செய்யப்படும் – அஸ்ய்ராப் வாஜ்டி
- Surendran Sumdraraj
- 16 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 16 –
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை (PRN) முன்னிட்டு பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஸ்ய்ராப் வாஜ்டி துசுக்கி தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற (Tribunal bagi Antibuli) அறிமுக நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது சுமுகமாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.
“ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “அடுத்த வாரத்திற்குள் இந்த பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்,” என்றும் அஸ்ய்ராப் வாஜ்டி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

