வெயிலில் உருகிய ஆபிரகாம் லிங்கன்!

top-news

 அமெரிக்காவில் வாஷிங்டனில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அங்குள்ள துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி உள்ளது.

அமெரிக்காவில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலையின் தாக்கத்தால் மெழுகால் செய்யப்பட்ட சிலைகளும் உருகி வருகிறது. அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகியது. சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

1860ம் ஆண்டு மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் துவக்கப்பள்ளி வளாகத்தில் மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இது வெயிலில் உருகி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *