BRAZIL + MALAYSIA பொருளாதார மேம்பாடுகள்! - அன்வார் நம்பிக்கை
- Thina S
- 25 Aug, 2024
Brazil நாட்டின் வெளியுறவு அமைச்சர் Mauro Vieira மலேசியப் பிரதமர் அன்வாருடன் அதிகாரப்பூர்வச் சந்திப்பை நடத்தினார். ஆசிய நாடுகளுக்குப் பொருளாதார மேம்பாட்டுக்கானச் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள Brazil நாட்டின் வெளியுறவு அமைச்சர் Mauro Vieira இன்று காலை 11 மணிக்குப் பிரதமர் அன்வாரை Kompleks Seri Perdanaவில் சந்தித்தார்.
மலேசியா பிரேசில் நாடுகளுக்கிடையிலான வர்த்தக மேம்பாட்டு பரிவர்த்தனைகள் மேம்படுவதற்கானச் சூழல் அமைந்திருப்பதாகப் பிரதமர் அன்வார் நம்பிக்கை அளித்துள்ளார். புதிய நாடுகளிடமிருந்து பெறப்படும் முதலீடுகளைக் கவனத்தில் கொள்வது போல முந்தைய முதலீடுகளையும் தற்காப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *