பிரிக்ஸ் மாநாடு: ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகை – பலத்த பாதுகாப்பு

top-news

புதுடெல்லி, செப். 11 –

18-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காலை டெல்லி வந்தடைந்தார். அவரின் வருகையை முன்னிட்டு தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்த புதினை, மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கே.வி.சிங் விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார்.

பிரிக்ஸ் அமைப்பின் 18-ஆவது உச்சி மாநாடு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு இந்தியா நான்காவது முறையாக தலைமை ஏற்றுள்ளது.

ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல்-சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *