இப்போது தேர்தலை நடத்த அவசியம் இல்லை! பாரிசானுக்குப் பேராக் பி.கே.ஆர் மிரட்டல்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 6,

நாடாளுமன்றத்தை அவசர அவசராமாகக் கலைத்து தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என பேராக் மாநிலப் பி.கே.ஆர் உதவித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான Sandrea Ng Shy Ching தெரிவித்தார். 16-ஆவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளதால் தற்போது கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்துவது பொறுத்தமற்றது என Sandrea Ng Shy Ching தெரிவித்தார். 

எதிர்கட்சிகள் இது போல தேர்தலை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுப்பது இயல்பானது என்றாலும் ஆட்சியிலும் இருக்கும் கட்சிகளும் இதனை வழிமொழிவது ஏற்புடையதல்ல என Sandrea Ng Shy Ching வலியுறுத்தினார். பேராக்கில் பக்காத்தானும் பாரிசானும் இணைந்து ஆட்சி அமைத்திருப்பதையும் Sandrea Ng Shy Ching சுட்டிக்காட்டினார். பாரிசானுக்கு அதிகப் பெரும்பான்மை இல்லை என்றாலும் பேராக்கில் மெந்திரி பெசாராகப் பாரிசான் கட்சி பொறுப்பில் இருக்க, பக்காத்தான் அதன் ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வருவதைப் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரான Sandrea Ng Shy Ching சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *