அன்வார் சும்மா இருக்க கூடாது! டி.ஏ.பி வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 6,

ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்கிற அச்சுறுத்தல்களை எதிர்நோக்க பிரதமர் Datuk Seri Anwar Ibrahimக்கு டி.ஏ.பி ஆதரவாக இருக்கும் என டி.ஏ.பி பொதுச் செயலாளர் Anthony Loke தெரிவித்தார். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என நினைப்பவர்களைப் பிரதமர் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும். பிரதமர் அன்வார் அவர்களுக்கு அடிப்பணிய கூடாது என்றும் ஆட்சிக் காலம் முடியும் வரையில் அன்வார் மட்டுமே பிரதமர் என்பதில் டி.ஏ.பி கட்சி உறுதியாக இருப்பதாகப் போக்குவரத்து அமைச்சருமான Anthony Loke நம்பிக்கை அளித்தார்.

2027 டிசம்பரில் இந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும். இன்னும் 15 மாதங்கள் பிரதமர் அன்வார் தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டும் என Anthony Loke தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வாருக்குப் பெரும்பான்மை இருக்கிறது. இந்த பெரும்பான்மையுடன் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அன்வார் பிரதாமராக நிலைத்திருக்க வேண்டும் என Anthony Loke கேட்டுக்கொண்டார். ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலும் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலும் நாடாளுமன்றத்தைத் தீர்மானிக்காது என்பதை Anthony Loke சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *