சமநிலையிலான வளர்ச்சியை 2025 பட்ஜெட் உறுதிப்படுத்தும்! - Jonathan Vela

top-news

எதிர்வரும் 18 அக்தோபர்  நாட்டின் 2025 ஆம் ஆண்டுக்கானப் பட்ஜெட்டைப் பிரதமர் அன்வார் அறிவிக்கவிருக்கும் நிலையில் சமூகத் தலைவர்களுடன் தமிழ் மலர் நடத்திய கருத்தாக்கங்களின் தொகுப்பில் பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் அவர்களுடைய சிறப்பு அதிகாரி ஜோனதன் வேலா அவர்களின் கருத்து.

மக்களின் ஏக்கத்தையும் உணர்வையும் அனுபவமாக உணர்ந்த ஒரு பிரதமராக அன்வார் திகழ்கிறார். அவரின் தலைமையில் 2025 ஆம் ஆண்டுக்கானப் பட்ஜெட் சிறந்த முறையில் நிறைவேற அனைத்து வகையிலும் நாம் அவருடன் நிற்போம். மலேசியராகப் பட்ஜெட் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் மிகுந்துள்ளது, பட்ஜெட்டில் என்னுடைய எதிர்பார்ப்பாக அனைத்து இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து ஒரு பட்ஜெட்டாக இது இருக்க வேண்டும். முக்கியமாகத் தோட்டப்புறங்களுக்கும் நகர்புறங்களுக்குமான ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்திச் செய்வதற்கான முன்னெடுப்புகள் அவசியமாக உள்ளது.

வறுமையில் உள்ள குடும்பங்களுக்கானச் சிறப்புக் கல்வி நிதியுதவியும் வழங்கப்படுவதை அரசு ஒரு திட்டமாகக் கொண்டு வர வேண்டும். அவர்களின் வறுமை நிலையில் முழுவதும் தீர்க்கப்பட ஒரே வழி அவர்களின் கல்வி. அத்தகு கல்வியை அவர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும்.  அவர்களுக்கு வழங்கப்படும் சுமையில்லா கல்வி ஒரு குடும்பத்தையே மேம்படுத்தும். மலேசிய இந்தியராக எனக்குள் இருப்பது இந்தியர்களுக்கான வணிகத்துவ வாய்ப்புகளுக்கு அரசு வழங்கும் மானியங்கள் சிறு வணிகர்களின் தொடர் மேன்மைக்காக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். நாட்டின் பொருளாதார மீட்சியுடன் இந்திய சிறு குறு வணிகர்கள் பிந்தங்கி விடாமல் இருப்பதையும் நாம் உறுதிப்பட வேண்டும். 



https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *