பட்ஜெட்டில் இந்தியர்கள் ஒதுக்கப்படவில்லை! சஞ்சீவனுக்கு துணை அமைச்சர் ரமணன் விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 21, 

அரசியலுக்காக நாம் எதை வேண்டுமானாலும் பேசலாம் எனும் போக்கு இப்போது உருவாகிவிட்டது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நாட்டின் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுவதாகக் குறிப்பிடுவது முறையல்ல என துணை அமைச்சர் ரமணன் தெரிவித்தார். 130 மில்லியன் மலேசிய இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான 130 மில்லியன். சுகாதார அமைச்சின் 2 பில்லியன், சமூக நலத்துறையில் 13 பில்லியன், கல்வித் துறையில்  RM64.1 பில்லியன் என அனைத்து சமூகமும் பயனடையும் வகையில் ஒவ்வொரு அமைச்சிலும் இந்தியர்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள் பல உள்ளன. ஒரு பொறுப்பானச் சமூகத் தலைவர்களாக நீங்களும் நானும் ஒவ்வொரு அமைச்சின் கீழும், துறையின் கீழும் இருக்கும் பயன்களை இந்தியச் சமூகத்திற்குக் கொண்டு சேர்க்கும் வழியைப் பார்ப்போம் என துணை அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *