RM2.4 பில்லியன் போதைப்பொருள் கும்பலுடன் கடத்தப்பட்ட நபருக்கு நெருங்கிய தொடர்பு – போலீஸ் தகவல்

top-news

கோலா சிலாங்கூர், செப். 9 –

கடந்த ஜூலை மாதம் ஷா ஆலாமின் ஐ-சிட்டி பகுதியில் போலீசாரால் மீட்கப்பட்ட கடத்தல் சம்பவத்தின் பாதிக்கப்பட்ட நபருக்கு, அண்மையில் முறியடிக்கப்பட்ட RM2.4 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் ஆய்வக கும்பலின் முக்கிய நபருடன் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமர் கான் இதனை உறுதிப்படுத்தினார்.

போலீஸ் விசாரணையில், 44 வயதான அந்த உள்ளூர் நபருக்கும், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலம் செரம்பானில் நடைபெற்ற போலீஸ் நடவடிக்கையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய சந்தேக நபருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட முக்கிய சந்தேக நபர், பெரிய அளவில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விநியோக கும்பலின் மூளையாக செயல்பட்டதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அண்மையில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், சுமார் RM2.4 பில்லியன் மதிப்பிலான போதைப்பொருள் தயாரிப்பு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *