Ayatollah Ali Khamenei உடல் அடக்கம்; ஈரானில் பெரும் மக்கள் அஞ்சலி

top-news
FREE WEBSITE AD

தெஹ்ரான், ஜூலை 10-

ஈரான் உச்சபட்ச தலைவர் Ayatollah Ali Khamenei-யின் உடல், Mashhad நகரில் உள்ள Imam Reza Shrine-ல் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவையடுத்து, ஈரான்  முழுவதும் பல நாட்கள் துக்க நிகழ்வுகள் நடைபெற்றன. தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Ayatollah Ali Khamenei, சுமார் 37 ஆண்டுகள் ஈராநின் உச்சபட்ச தலைவராக இருந்து வந்தார். அவரது ஆட்சிக்காலம் ஈரான் அரசியல் வரலாற்றில் முக்கியமான காலகட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இறுதி ஊர்வலத்தின் போது, மக்கள் ஈரான் கொடிகள் மற்றும் Khamenei-யின் படங்களுடன் கலந்து கொண்டனர். சில இடங்களில் அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Khamenei மறைவுக்குப் பிறகு, ஈரானின் அடுத்த அரசியல் பாதை குறித்து உலக நாடுகள் கவனித்து வருகின்றன.

அவரது மகன் Mojtaba Khamenei புதிய உச்சபட்ச தலைவராக பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவர் இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் அதிகமாக தோன்றவில்லை.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *