பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சட்டத்தை ரத்து செய்யும் முன்மொழிவு: புதன்கிழமை அமைச்சரவையில் பரிசீலனை

top-news
FREE WEBSITE AD

ஆயர் கெரோ, ஆக. 15 —

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சட்டம் 1971 (சட்டம் 30) ரத்து செய்யப்படுவது தொடர்பான முன்மொழிவு, வரும் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான முன்மொழிவை அமைச்சரவை விரிவாகப் பரிசீலிக்கும் என்றும் அவர் கூறினார்.

“நான் இதை புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்குக் கொண்டு வருவேன்,” என்று, குறித்த சட்டத்தை ரத்து செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது பிரதமர் தெரிவித்தார்.

அன்வார் இப்ராஹிம் பிரதமராக மட்டுமன்றி நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆயர் கெரோவில் உள்ள மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் (எம்ஐடிசி) இன்று நடைபெற்ற 2026 கெஅடிலான் தேசிய மாநாட்டில், பிகேஆர் தலைவர் கொள்கை உரையை நிகழ்த்திய பின்னர் பிரதமர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சட்டம் 1971-ஐ ரத்து செய்வது தொடர்பான இறுதி முடிவு அமைச்சரவையின் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்குப் பின்னரே எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *