ஏ.ஆர். ரகுமான் மகன் அமீன் சென்ற சொகுசு கார் விபத்து!
- Surendran Sumdraraj
- 10 Aug, 2026
சென்னை, ஆக. 10-
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகன் மற்றும் பாடகரான ஏ.ஆர். அமீன் சென்ற சொகுசு கார் சென்னையில் அதிகாலை விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அமீன், அவரது நண்பர் பார்கவ் மற்றும் மற்றொரு காரின் ஓட்டுநர் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அமீன் தனது நண்பருடன் காரில் கோயம்பேடு பகுதியில் இருந்து சென்று கொண்டிருந்தபோது, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தில், அமீன் சென்ற கார் எதிரே வந்த கால் டாக்சியுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. மோதலில் இரு வாகனங்களும் சேதமடைந்தன.
விபத்தில் காயமடைந்த அமீன் மற்றும் அவரது நண்பர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தின் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



