சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு
- Surendran Sumdraraj
- 30 Sep, 2026
சென்னை: தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது ஏற்கனவே இரண்டு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 16 வயது சிறுமி ஒருவரின் தற்கொலை சம்பவம் தொடர்பாக அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் ஜெம் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் அவருக்கு துணையாக செயல்பட்டதாக கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தற்போது விசாரணையில் உள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

