காவிரி நீர் விவகாரம்: மக்களவையில் டி.ஆர். பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ்
- Surendran Sumdraraj
- 13 Aug, 2026
புதுடெல்லி, ஆக. 13-
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று நிறைவடைய உள்ள நிலையில், காவிரி நீர் பிரச்சினையை அவசர விவகாரமாக எடுத்துக்கொண்டு விவாதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்றும், தமிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீர் கிடைக்காததால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஆர். பாலு தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



