8 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து; லாரி ஓட்டுநருக்கு RM 9000 அபராதம்!
- Shan Siva
- 13 Aug, 2026
பத்து பஹாட், ஆக 13: இந்த மாத தொடக்கத்தில் எட்டு வாகனங்கள் மோதிக்கொண்ட
விபத்திற்குக் காரணமான, கவனக்குறைவாக
வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநருக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று RM9,000 அபராதம் விதித்தது.
குற்றத்தை
ஒப்புக்கொண்டதையடுத்தும், அவரது
தண்டனைக் குறைப்பு மேல்முறையீட்டைக் கருத்தில் கொண்டும், 54 வயதான முகமது அஸ்மாவி அலியாஸுக்கு மாஜிஸ்திரேட் முஸ்தகிம்
சுகர்னோ இந்தத் தண்டனையை வழங்கினார்.
மேலும், அபராதத்தைச் செலுத்தத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவர் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை
அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர் அபராதத்தைச்
செலுத்திவிட்டார்.
கூடுதலாக, அவரது ஓட்டுநர் உரிமத்தில் குற்றத்தீர்ப்பு விவரங்களைப்
பதியுமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 4 அன்று மதியம் 12 மணிக்கு, வடக்கு-தெற்கு
விரைவுச்சாலையின் (வடக்கு நோக்கிச் செல்லும்) கி.மீ 128.1-ல், போதிய
கவனமின்றி வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அஸ்மாவி மீது குற்றம்
சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் திடீரென
வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தத்
தவறி,
முன்னால் சென்ற ஏழு வாகனங்கள் மீது மோதினார்.
இந்த மோதலில் ஒரு வோக்ஸ்வாகன்
போலோ கார் முற்றிலுமாக சேதமடைந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மற்ற சாலைப் பயனாளிகள்
மீது போதிய கவனமின்றி வாகனம் ஓட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



