வேளாண் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.355.88 கோடி நிதி – மத்திய அரசு ஒப்புதல்

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி, செப். 3 –

மத்திய அரசின் முக்கிய வேளாண் திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.355.88 கோடி நிதியை இரண்டாம் தவணையாக விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில வேளாண் அமைச்சர்கள் மற்றும் மாநில துறைச் செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா மற்றும் கிருஷ்ணோன்னதி யோஜனா ஆகிய இரண்டு முக்கிய வேளாண் திட்டங்களின் கீழ் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு இரண்டாம் தவணை நிதியை உடனடியாக விடுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, ஐந்து மாநிலங்களுக்கும் மொத்தம் ரூ.1,183.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.355.88 கோடி வழங்கப்படுகிறது.

அதேபோல், ஆந்திர மாநிலத்திற்கு ரூ.409.40 கோடி, ஒடிசாவுக்கு ரூ.219.65 கோடி, உத்தரகாண்டுக்கு ரூ.106.67 கோடி மற்றும் திரிபுராவுக்கு ரூ.91.51 கோடி நிதி விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *