மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு
- Surendran Sumdraraj
- 07 Oct, 2026
சென்னை, அக். 7: சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பால் கொள்முதல், பதப்படுத்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் தினமும் சுமார் 4 லட்சம் முதல் 4.5 லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து 45-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் வழியாக லாரிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அண்மையில் சென்னையின் சில பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் குறைந்ததால், பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடைகளில் ஆவின் பால் விரைவாக விற்றுத் தீர்வதால், சிலர் அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பால் விநியோகத்தை சீரமைப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

