புகைப்படக் கலைஞர்களை படம் எடுத்த முதலமைச்சர் விஜய்
- Surendran Sumdraraj
- 21 Aug, 2026
சென்னை: உலக புகைப்பட நாளையொட்டி, புகைப்படக் கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் சிறப்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, புகைப்படக் கலைஞர்களை அவரே புகைப்படம் எடுத்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.
உலக புகைப்பட நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த சமூகக் கண்ணாடியாகப் புகைப்படம் விளங்குகிறது என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதுடன், வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிகழ்வுகளையும் கலைநயம் மிக்க புகைப்படங்கள் மூலம் உணர்த்தும் புகைப்படக் கலைஞர்களை அவர் பாராட்டியுள்ளார். அவர்களின் கலைப் பயணம் சிறக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



