விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய சீன ராக்கெட்

top-news
FREE WEBSITE AD

பெய்ஜிங், ஆக. 12-

 சீனாவில் விண்ணில் ஏவப்பட்ட லாங் மார்ச் 7ஏ ராக்கெட், புறப்பட்ட 85 வினாடிகளிலேயே நடுவானில் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி இரவு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சைனாசாட்-4பியை (ChinaSat-4B) உயர் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்ட சில விநாடிகளில் அதன் பயணத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் ராக்கெட்டும் அதில் கொண்டு செல்லப்பட்ட செயற்கைக்கோளும் இழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *