டெங்கிலில் பள்ளி மாணவி முச்சுத்திணறலால் பலி!

top-news

சிப்பாங், அக் 20: டெங்க்கில் (Dengkil) பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், முதலாம் ஆண்டு பயிலும் சிறுமி ஒருவர் நேற்று வகுப்பறையில் இருந்தபோது மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

சிப்பாங் மாவட்ட காவல் துறைத் தலைவர், ஏசிபி நோர்ஹிசாம் பகமான், நேற்று மாலை 7:30 மணியளவில் ஒரு பெண்ணிடமிருந்து இது குறித்த புகார் தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சம்பவ இடத்திலேயே முதற்கட்ட சுவாச உதவி வழங்கப்பட்டதாகவும், அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் புத்ராஜெயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், புத்ராஜெயா மருத்துவமனைக்குச் சென்றடைந்தபோது, ​​அந்தச் சிறுமி உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சிப்பாங் மாவட்ட காவல் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை, இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று காலை 8:00 மணிக்கு புத்ராஜெயா மருத்துவமனையில் உடற்கூறாய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு 'திடீர் மரணம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் காவல் துறை கேட்டுக்கொள்கிறது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *