காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 28-

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 160 கிலோவும் தூக்கி, மொத்தம் 286 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதையடுத்து, தனது சமூக வலைதளப் பதிவில் கமல்ஹாசன், “காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கும் இளம் வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். சிறிய நகரங்களில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கும் அவரது சாதனை புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும்,” என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *