ஜேடிதி, ஸ்பெயினில் நட்பு முறை ஆட்டங்களை வெற்றியுடன் நிறைவு செய்தது!
- Muthu Kumar
- 23 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 23-
ஜொகூர் டாருல் தாக்சிம் (ஜேடிதி) அணி, ஸ்பெயினில் நடைபெற்ற தங்களது நட்பு முறை ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. சவூதி அரேபியாவின் அல்-ரியாத் எஸ்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் இந்த நட்பு முறை ஆட்டத்தை நிறைவு செய்தது.
இந்தப் போட்டியில் ஜேடிதி அணியின் வீரர் ஜோவோ பிகுரெய்டோ பத்தாவது நிமிடத்தில் அடித்த ஒரே கோல் மூலம் அந்த அணி வெற்றி பெற்றது. இது மலேசியாவின் பூர்வீக இறக்குமதி ஜோவோவின் ஜேடிதி அணிக்கான முதல் கோலாகும். இதற்கு முன், ஜேடிதி அணி, தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளைச் சந்தித்திருந்தது. கத்தாரின் அல்-ரய்யான் எஸ்சி, வலென்சியா மெஸ்ட்டாலா அணிகளுக்கு எதிராக 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.
ஸ்பெயினில் தங்களது நட்புமுறை ஆட்டங்களை ஜேடிதி அணி, ரியல் முர்சியா இம்பீரியல் அணிக்கு எதிராக 4-0 என்ற பெரிய வெற்றியுடன் தொடங்கியது. பின்னர், கோஸ்டா சிட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து வெற்றி பெற்றது.இந்த நட்புமுறை ஆட்டங்கள், ஜேடிதி அணிக்கு அனுபவத்தையும், அணியின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



