அரசுப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு: விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
- Surendran Sumdraraj
- 07 Oct, 2026
புதுடெல்லி, அக். 7: அரசுப் பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
நரேந்திர மோடி கடந்த 2001 அக்டோபர் 7-ஆம் தேதி குஜராத் மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார். தொடர்ந்து 2014 மே மாதம் வரை அந்தப் பதவியில் இருந்த அவர், பின்னர் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார். இதன் மூலம் அரசுத் தலைமையிலான பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு பாஜகவினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி விநாயகர் கோயிலுக்குச் சென்று பூஜை செய்து வழிபட்டார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மோடி, நாட்டில் உள்ள அனைவரின் மகிழ்ச்சி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக விநாயகரிடம் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார். தடைகளை நீக்கும் விநாயகரின் அருள் அனைவருக்கும் நலனை வழங்க வேண்டும் என்றும், நாடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

