புதிய காதலியை அறிமுகப்படுத்திய நடிகர் ஆமிர் கான்!

- Muthu Kumar
- 15 Mar, 2025
நடிகர் ஆமிர் கான் தனது புதிய காதலி கௌரி ஸ்ப்ராட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், இருவரும் ஒராண்டாக ஒன்றாக வாழ்வதாகக் கூறி உள்ளார்.குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டுமென நடிகர் ஆமிர்கான் சமீக காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி வந்தார்.
ஆமிர் கான் முதல்முறையாக 1986-2002 வரை தயாரிப்பாளர் ரீனா டட்டுடன் திருமணம் செய்து வாழ்ந்தார். அவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.பிறகு, 2005இல் கிரன் ராவை ஆமிர்கான் திருமணம் செய்தார். ஆனால், இவர்களும் 2021இல் பிரிந்தனர். ஆனாலும் இருவரும் அவர்களது குழந்தை ஆசாத்துக்காக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது 60ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்பட்ட விழாவில் அவரது காதலியை அறிமுகம் செய்துள்ளார்.
எனது காதலியை இந்த நேரத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்த விழைகிறேன். மேலும், நான் இனிமேல் மறைக்கவும் தேவையில்லை.
கௌரி ஸ்ப்ராட் பெங்களூரைச் சேர்ந்தவர். 25 ஆண்டுகளாக எனக்கு அவரைத் தெரியும். ஆனால், கடந்த ஓன்றரை ஆண்டாகத்தான் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.மும்பையில் எதேர்ச்சையாக சந்தித்தோம். பின்னர் தொடர்பில் இருந்தோம். மற்றதெல்லாம் இயற்கையாக நடந்தது.
நான் ரீனாவுடனும் கிரனுடனும் 16 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். பல வழிகளில் நாங்கள் இன்னமும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
60 வயதில் திருமணம் செய்வது எனக்கு பொருந்துமா தெரியவில்லை. எனது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். முன்னாள் மனைவிகளுடன் நல்ல பந்தத்தில் இருக்கிறேன் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *