லட்சம் லட்சமாய் நிதியுதவி செய்யும் நடிகர் தனுஷ்!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் தனுஷ். நடிகர் ரஜினியின் முன்னாள் மருமகன். தயாரிப்பாளர் பாடகர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர்.
இப்போது அவர் தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படத்திலும் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான படம் குபேரா. தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் வெளியான இந்த படம் தெலுங்கில் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. ஆனால் குபேரா படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்கவில்லை. அதனால் தமிழில் குபேரா படம் படுதோல்வியை சந்தித்தது.

பவர் பாண்டி,ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆகிய 3 படங்களை டைரக்ட் செய்த நடிகர் தனுஷ் அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அந்த படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நித்யா மேனன் சத்யராஜ் ராஜ்கிரண் அருண்விஜய் பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகராக தனுஷ் அறிமுகமான படம் துள்ளுவதோ இளமை. இந்த படத்தை அவரது அப்பா கஸ்தூரி ராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்தவர் அபினய். அவர் சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான சூழலில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நடிகர் கேபிஒய் பாலா ரூ. 1 லட்சம் நிதியுதவி செய்தார்.

ஆனால் இதற்கு முன்பாகவே நடிகர் தனுஷ், நடிகர் அபினய்க்கு மருத்துவ செலவுகளுக்காக ரூ. 5 லட்சம் கொடுத்து உதவிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அத்துடன் அவர் தனது அண்ணன் செல்வராகவன் மற்றும் தனது சகோதரிகளுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட ஒரு பெரிய தொகையை, அதாவது சில லட்சம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் செலுத்தி வருகிறார்.

இதில் மற்றொரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பொல்லாதவன் படம் ரிலீஸ் ஆன காலத்தில், அதாவது கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இதுவரை மாதந்தோறும் 6 லட்சம் ரூபாய் இயக்குனர் வெற்றிமாறன் வங்கி கணக்கில் தனுஷ் செலுத்தி வருகிறார். வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்க ரூ. 20 கோடி சம்பளம் வாங்கும் நிலையில், நடிகர் தனுஷ் எதற்காக மாதந்தோறும் ரூ. 6 லட்சம் இயக்குனர் வெற்றிமாறனுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்பது ரசிகர்களுக்கு பெரிய குழப்பத்தை தந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *