நடிகர் தனுஷ் நடித்து சாதனை படைத்த தேரே இஷ்க் மேய்ன்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மேய்ன் திரைப்படம் அசத்தலான வசூலைச் செய்துள்ளது. நடிகர் தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் நேரடியாக ஹிந்தியில் உருவான தேரே இஷ்க் மேய்ன் திரைப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.

நவம்பர் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் காதல் காட்சிகள் மற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் பாடல்களால் வரவேற்பும் பெற்றது.தமிழிலும் பலருக்கு இப்படம் பிடித்திருந்தாலும் சரியான புரோமோஷன் இல்லாததால் அதிக திரைகளில் வெளியாகவில்லை.

இந்நிலையில், தேரே இஷ்க் மேய்ன் திரைப்படம் உலகளவில் ரூ. 152 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் ரூ. 150 கோடி வசூலித்ததைத் தொடர்ந்து தேரே இஷ்க் மேய்ன் படமும் இப்பட்டியலில் இணைந்துள்ளது தனுஷ் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *