குன்யாவின் இரட்டை கோல்; ஹெய்டியை 3-0 என வீழ்த்தியது பிரேசில்

top-news

பிலடெல்பியா, ஜூன் 20 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணி ஹெய்டியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ‘குரூப் சி’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

பிலடெல்பியா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் மதேயுஸ் குன்யா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு கோல்களைப் பதிவு செய்தார். மேலும், வினிசியஸ் ஜூனியரும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில், இரண்டு ஆட்டங்களில் நான்கு புள்ளிகளைப் பெற்று ‘குரூப் சி’ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதேவேளை, ஸ்காட்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மொராக்கோவும் நான்கு புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *