ஜோகூரில் 40 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
- Surendran Sumdraraj
- 20 Aug, 2026
ஜோகூர் பாரு, ஆக. 20-
ஜோகூர் மாநில போலீசார், நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த 40,269 வழக்குகள் தொடர்பான போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குப் பொருட்களை அழித்துள்ளனர். 1999 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இப்பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 40.02 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் டத்தோ ஹூ சுவான் ஹுவாட் இதுகுறித்து கூறுகையில், போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை (ஜே.எஸ்.ஜே.என்.) சார்பில் இந்த அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
தேசிய போலீஸ் தலைவர் வெளியிட்டுள்ள நிரந்தர உத்தரவின் கீழ், நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த வழக்குகளின் பொருட்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப அழிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில் திட வடிவில் 532.76 கிலோவும், திரவ வடிவில் 10,072 லிட்டரும் அடங்கும். இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருட்கள் சமூகத்தில் புழக்கத்திற்கு வந்திருந்தால், சுமார் 13.9 லட்சம் பேரை பாதித்திருக்கக்கூடும் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



