இனம் & மதம் அடிப்படையில் வாக்கு செலுத்த வேண்டாம்! டி.ஏ.பி வேண்டுகோள்!
- THINAGAREN SANGGAREN
- 01 Nov, 2026
நவம்பர் 1,
வாக்காளர்கள் தேர்தலின் போது இன மத அடிப்படையில் வாக்குகளைச் செலுத்தாமல் மக்கள் நலத்திட்டக் கொள்கைகளின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என டி.ஏ.பி கட்சியின் தேசியப் பொருளாளர் Datuk Ngeh Koo Ham கோரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர்கள் மதம் மற்றும் இனம் சார்ந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், கொள்கைகள் மற்றும் தலைமைத்துவத் திறனின் அடிப்படையில் அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தால் அது நியாயமான தேர்தல் வெற்றியாக அங்கீகரிக்கப்படும் என BERUAS நாடாளுமன்ற உறுப்பினருமான Datuk Ngeh Koo Ham தெரிவித்தார்.
நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் நலனையும் முன்னிருத்தும் அரசியல் கட்சிக்கு மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என Datuk Ngeh Koo Ham கேட்டுக்கொண்டார். பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM தலைமையிலான அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுகிறது என நம்மால் கூற முடியாது. மடானி அரசு அனைத்துச் சமூகங்களின் நலன்களையும் முன்னிருத்துகிறது. ஆனால் குறிப்பிட்ட ஒரு சில கட்சிகள் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்காக மட்டுமே வாயைத் திறக்கும். அப்படியான குறுகிய மனப்பான்மையில் இருக்கும் அரசியல் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என Datuk Ngeh Koo Ham கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

