ஜொகூர் தேர்தலில் டி.ஏ.பி 17 தொகுதிகளில் போட்டியிடும்! – ANTHONY LOKE உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 19 Jun, 2026
ஜூன் 19,
ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பி 17 தொகுதிகளில் போட்டியிடும் என்பதை டி.ஏ.பி பொதுச் செயலாளர் ANTHONY LOKE உறுதிப்படுத்தினார். 2022 ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பி 14 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 10 சட்டமன்றங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 17 சட்டமன்றங்களில் போட்டியிடும் என அந்தோணி லோக் தெரிவித்தார். டி.ஏ.பியின் முதல் வேட்பாளர் Chu Poh Yee, Mengkibol சட்டமன்றத்தில் போட்டியிடுவார் என நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அந்தோணி லோக் அறிவித்தார்.
டி.ஏ.பியின் மற்ற வேட்பாளர்களைப் பக்காத்தான் தலைமை உறுதி செய்த பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்குமென அந்தோணி லோக் தெரிவித்தார். ஜொகூரின் PUTERI WANGSA சட்டமன்றத்தில் டி.ஏ.பி போட்டியிடாது என்றும் பி.கே.ஆர் அமானா கட்சிகள் PUTERI WANGSA சட்டமன்ற வேட்பாளர் குறித்து சுமூகமான ஒரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றும் டி.ஏ.பி பொதுச் செயலாளர் ANTHONY LOKE வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

