DAP சீனர்களின் ஆதிக்கம் நிறைந்த கட்சி!
- THINAGAREN SANGGAREN
- 20 Oct, 2026
அக்தோபர் 20,
பல ஆண்டுகளாக எதிர்கட்சியாக இருந்து அரங்கமாக மாறியிருக்கும் DAP கட்சி சீனர்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு கட்சி என பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி விமர்சித்தார். DAP கட்சியின் உயரிய பொறுப்பு பொது செயலாளர் பொறுப்பு. அதற்கு இந்தியரோ மலாய்க்காரரோ நியமிக்கப்பட முடியுமா என ராமசாமி கேள்வி எழுப்பினார். DAP தங்களை பல்லின கட்சியாக காண்பித்தாலும் அது பெரிதாக MCA, GERAKAN எனும் சீனர்களின் கட்சிக்கு எதிராகவே செயல்படுகிறது என உரிமை கட்சியின் தலைவரான ராமசாமி தெரிவித்தார்.
DAP யில் இந்தியர்களும் மலாய்க்காரர்களும் சிறுபான்மையாக இருப்பதாகவும் அவர்களால் கட்சியின் தலைமையை நிர்ணயிக்க முடியாது என ராமசாமி சுட்டிக்காட்டினார். கட்சியில் இருப்பவர்களின் மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்தோணி லோக் தெரிவித்தாலும், ஆளுமைமிக்க சீன அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வேட்பாளர்களை விடவும் உண்மை மக்கள் ஆதரவைக் கொண்ட வேட்பாளர்களுக்கு DAP எப்படி வாய்ப்பு வழங்கும் என ராமசாமி கேள்வி எழுப்பினார். DAP கட்சியில் 80% சீனர்கள் என்பதை நாம் மறக்கவில்லை என ராமசாமி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

