ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிப்பதா? ஜோகூர் டிஏபி பிரதிநிதிகளுக்கு முடிவெடுக்கும் சுதந்திரம்

top-news
FREE WEBSITE AD

கூலாய், ஆக. 14 —

ஒற்றுமை அரசாங்கத்தில் டிஏபி தொடர்ந்து அங்கம் வகிக்க வேண்டுமா அல்லது அதிலிருந்து விலக வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் முழுமையான சுதந்திரம் ஜோகூர் மாநில பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் என ஜோகூர் டிஏபி தலைவர் தியோ நீ சிங் கூறினார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டிஏபி மாநாட்டில், பிரதிநிதிகள் வாக்களிப்பதன் மூலம் இது தொடர்பான முடிவு எடுக்கப்படவுள்ளது.

மாநாட்டில் பிரதிநிதிகள் எடுக்கும் எந்தவொரு முடிவையும் மாநிலக் கட்சி ஏற்றுக்கொள்ளும் என்று தியோ தெரிவித்தார்.

“உண்மையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அளவில் இதுவரை ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்லை. காரணம், இது வாக்கெடுப்புடன் தொடர்புடையது. எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மாநாட்டில் பிரதிநிதிகளுக்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பான தீர்மானம் குறித்து பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக்குடன் நேற்று கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றதாக தியோ நீ சிங் கூறினார்.

அந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னணி மற்றும் அதன் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *