சட்டமன்றத் தொகுதிகளை விட்டுக்கொடுக்கமாட்டோம்! டி.ஏ.பி உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 08 Sep, 2026
செப்டம்பர் 8,
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பி அதன் தொகுதிகளை விட்டுக்கொடுக்காது என டி.ஏ.பி பொதுச் செயலாளர் ANTHONY LOKE இன்று தெரிவித்தார். அதே போல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சரவாக் மாநிலச் சட்டமன்றத்திலும் டி.ஏ.பி அதன் தொகுதிகளைத் தக்கவைக்கும் என்றும் வெற்றிப் பெற கூடிய தொகுதிகளை அடையாளம் கண்டு போட்டியிடும் என போக்குவரத்து அமைச்சருமான ANTHONY LOKE உறுதியளித்தார்.
கடந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பி கட்சி 8 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 4 சட்டமன்றங்களில் வெற்றிப் பெற்றது. 2021 சரவாக் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பி கட்சி 26 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 2 சட்டமன்றங்களில் மட்டுமே வெற்றிப் பெற்றது. அடுத்த ஆண்டு பிப்ரவரி சரவாக் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில் சரவாக்கில் டி.ஏ.பி வெற்றி பெறுவதற்கான சட்டமன்றங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளிப் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற உழைப்போம் என்றும் டி.ஏ.பி பொதுச் செயலாளர் ANTHONY LOKE நம்பிக்கை தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

