டி.ஏ.பியைக் குறை சொல்லாமல் அம்னோவால் தூங்க முடியாது! – TONY PUA
- THINAGAREN SANGGAREN
- 22 Nov, 2026
நவம்பர் 22,
டி.ஏ.பியைக் குறை சொல்லியே அம்னோ பழகிவிட்டதால் இப்போது நஜீப்பின் விவகாரத்திலும் அம்னோ டி.ஏ.பியின் மீது குற்றம் சாட்டுவதாக டி.ஏ.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் TONY PUA சாடினார். நஜீப்பிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்கு டி.ஏ.பி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்னிப்பு வாரியத்தின் கூட்டக் குறிப்பை நான் வெளியிட்டேன். நான் யாரையும் சாடவில்லை.நான் யாரையும் எதிர்க்கவுமில்லை என தோனி புவா தெரிவித்தார்.
நஜீப்பிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் டி.ஏ.பியின் நிலைப்பாடு கூட்டக் குறிப்பில் தெளிவாக உள்ளது. நஜீப் ஓர் ஊழல்வாதி என்பதால் அவருக்கு நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியது. மாமன்னரின் பொது மன்னிப்பை டி.ஏ.பி ஏற்கவில்லை என்றாலும் நாங்கள் எதிர்க்கவில்லை. அம்னோவுக்கு நேரம் போகவில்லை என்றால் இப்படி டி.ஏ.பியைச் சீண்டி பார்க்கும். மன்னிப்பு வாரியத்தின் முடிவில் நான் தலையிடவில்லை. மாமன்னரின் உத்தரவையும் நான் எதிர்க்கவில்லை. என்ன நடந்ததோ அது கூட்டக் குறிப்பில் இருக்கிறது. அந்த கூட்டக் குறிப்பை நான் வெளியிட்டேன் என தோனி புவா அம்னோவுக்குப் பதிலளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

