விஜய்க்கு சூசக அழைப்பு விடுக்க காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி !
- Muthu Kumar
- 07 Nov, 2024
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி உருவாக்கப்பட்டால் அவர்களுக்கு அதிக இடங்களை கொடுக்க அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளாராம்.நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். அதில் சில விஷயங்களை சூசகமாக பேசி உள்ளார். அதில் அதிமுக கண்டிப்பாக அடுத்த சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும். திமுக கூட்டணி வலிமையாக இல்லை. அவர்களின் கூட்டணியில் பிரச்சனை உள்ளது.அதிமுக வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களின் கூட்டணி உடையும் . அதிமுக பெரிய கூட்டணி அமைக்கும். ஆனால் நாம் அதற்கு முன் கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் கட்சியில் கூட்டங்களை நடத்த வேண்டும்.
நமக்கு கூட்டணி வேண்டும் என்றால்.. நாம் வலிமையாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக இருந்தால்தான் கட்சிகள் கூட்டணிக்கு தயாராக இருக்கும். அதோடு இல்லாமல் நாம் வலிமையாக இருந்தால் கூட்டணியில் அதிக இடங்களை வைத்துக்கொள்ள முடியும். பெரிய கட்சிகள் வந்தால் கூடுதல் இடங்களை கொடுக்கலாம்.
புதிய நிர்வாகிகளை சேர்க்க வேண்டும். செயல் வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும். அப்போதுதான் கட்சி வலிமை அடையும். முக்கியமாக பூத் கமிட்டியை அமைக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட பூத் கமிட்டியை புதுப்பிக்க வேண்டும். இதுதான் இப்போது அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசி இருக்கிறாராம்.
இதில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி உருவாக்கப்பட்டால் அவர்களுக்கு அதிக இடங்களை கொடுக்க அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளாராம். நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது.
நமக்கு கூட்டணி வேண்டும் என்றால் நாம் வலிமையாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக இருந்தால்தான் கட்சிகள் கூட்டணிக்கு தயாராக இருக்கும். அதோடு இல்லாமல் நாம் வலிமையாக இருந்தால் கூட்டணியில் அதிக இடங்களை வைத்துக்கொள்ள முடியும். பெரிய கட்சிகள் வந்தால் கூடுதல் இடங்களை கொடுக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னதற்கு பின் இதுதான் காரணம் என்கிறார்கள். விஜய்க்கு கொடுத்த சூசக அழைப்பு இது என்கிறார்கள்.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய் பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக, என்று நடிகர் விஜய் பேசி இருந்தார். ஆனால் அதிமுகவை விஜய் விமர்சனமே செய்யாத நிலையில்.. விஜய் - எடப்பாடி கூட்டணி வந்தாலும் வரலாம் என்கிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *