சினிமா ‘கிளைமாக்ஸ்’ விவாதம்: தமிழக சட்டசபையில் கலகலப்பான உரையாடல்
- Surendran Sumdraraj
- 27 Aug, 2026
சென்னை: தமிழக சட்டசபையில் அவை நடைமுறையை மாற்றுவது தொடர்பான விவாதம், சினிமா ‘கிளைமாக்ஸ்’ ஒப்பீட்டால் கலகலப்பாக மாறியது.
சட்டசபையில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மானியக் கோரிக்கை விவாதம் 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து நடைபெற்றதாகக் குறிப்பிட்டார். நேரம் காரணமாக அறிவிப்புகளை வெளியிடுபவர்களுக்கும் அவையில் இருப்பவர்களுக்கும் ஏற்படும் பதற்றத்தைக் குறைக்கும் வகையில், இனிமேல் அமைச்சர்கள் முதலில் அறிவிப்புகளை வெளியிட்டு பின்னர் பதிலுரை வழங்கும் நடைமுறை கொண்டு வரப்படும் என்றார்.
இதற்கு திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு, “அறிவிப்புகளை முதலில் வெளியிட்டு பின்னர் பதிலுரை வழங்குவது, திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை முதலில் காட்டுவது போல இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சபாநாயகர், “கிளைமாக்ஸை மக்கள் பார்க்காமல் போய்விடுவார்களோ என்பதுதான் எனது கவலை” என பதிலளித்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், படம் நன்றாக இருந்தால் மக்கள் கடைசி வரை காத்திருந்து கிளைமாக்ஸைப் பார்ப்பார்கள் என்றும், முன்பே கிளைமாக்ஸ் காட்டுவது படம் நன்றாக ஓடாது என்று கருதுவது போல இருப்பதாகவும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



