சிலாங்கூரில் தீபாவளி ஊக்கத் தொகை! RM 4.4 Million நிதி - Thiban Subramaniam
- Thina S
- 18 Sep, 2024
Deepavali Jom Shopping திட்டத்தின் வாயிலாகச் சிலாங்கூரின் Bukit Melawati தொகுதி மக்களுக்குப் பெருநாள் ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக Bukit Melawati சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் Thiban Subramaniam தெரிவித்தார்.
Bukit Melawati சட்டமன்றத்திற்கு 400 பற்றுச் சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் B40 மக்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பம் செய்யும்படியும் இன்று 18 செப்டம்பர் முதல் 23 செப்டம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்திற்காக 4.4 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ள நிலை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படியும் அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்றங்களுக்கும் தீபாவளி சிறப்பு உதவி நிதித் திட்டத்தைச் சிலாங்கூர் மாநில அரசு அறிவித்துள்ளதாகவும், குடும்ப வருமானம் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாகவும்
திருமணமாகாதவருக்கான வருமானம் மாதம் 2,000 வெள்ளிக்கும்
குறைவாகவும் இருக்கும் நிலையில் இச்சிறப்பு நிதியைப் பெறலாம் என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *