‘ஜனநாயகன்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் விரைவில் வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 28-

 நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் தணிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி நீக்கப்பட்ட காட்சிகளை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தணிக்கைப் பணிகளின்போது சில காட்சிகளில் மாற்றங்கள் செய்யவும், சில பகுதிகளை நீக்கவும் அறிவுறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

தணிக்கை வாரியத்தின் உத்தரவின் பேரில் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு, சில வசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மொத்தம் சில விநாடிகள் காட்சிகள் நீக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு தணிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திரையரங்கு வெளியீட்டில் இடம்பெறாத நீக்கப்பட்ட காட்சிகளை ரசிகர்களுக்காக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *