டெம்பெலே சிறந்த வீரர், ஐதானா போன்மாட்டி சிறந்த வீராங்கனை – FIFA விருதுகள் 2025

top-news

டோஹா, டிச. 17-

கத்தாரின் டோஹாவில் நடைபெற்ற FIFA சிறந்த கால்பந்து விருதுகள் 2025 விழாவில், பிரான்ஸ், பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) வீரர் உஸ்மான் டெம்பெலே ஆண்களுக்கான சிறந்த வீரர் விருதையும், பார்சிலோனாவின் ஸ்பெயின் நட்சத்திரம் ஐதானா போன்மாட்டி பெண்களுக்கான சிறந்த வீரர் விருதையும் வென்றனர்.

28 வயதான டெம்பெலே, செப்டம்பரில் பாலன் டி'ஓர் விருதை வென்றதைத் தொடர்ந்து இந்த விருதையும் கைப்பற்றினார். PSG அணி முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதுடன், லீக் 1, பிரெஞ்சு கோப்பையையும் கைப்பற்றியது. அனைத்துப் போட்டிகளிலும் 35 கோல்கள் அடித்த டெம்பெலே, முன்னாள் போருசியா டார்ட்மண்ட், பார்சிலோனா வீரரும், 2018 உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி உறுப்பினருமாவார்.

"என் அணி வீரர்களுக்கு நன்றி. கடின உழைப்பு வீண்போகவில்லை. இது எனக்கு தனிப்பட்ட, அணி ரீதியாக அற்புதமான ஆண்டு" என்று டெம்பெலே கூறினார். இவ்விழா PSG , பிளமெங்கோ இடையேயான பிபா இன்டர்கான்டினென்டல் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடைபெற்றது.

ஐதானா போன்மாட்டி மூன்றாவது முறையாக பெண்களுக்கான விருதை வென்று சாதனை படைத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *